தலதா மாளிகையின் பெரஹர உற்சவத்தின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்

Report Print Satha in சமூகம்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹர உற்சவத்தின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் நிலைமை உள்ளதாக அகில இலங்கை பஸ்நாயக்க நிலமேக்கள் சங்கத்தின் தலைவர் கயான் ஹீன்கந்தே தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பஸ்நாயக்க நிலமேக்கள் சங்கத்தின் பொதுக் கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர், இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.