காங்கேசன்துறை கடற்பரப்பில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட மூவர் கைது

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடற்பரப்பில் பயணித்த படகொன்றில் 77 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இருவரும், மன்னாரைச் சேர்ந்த ஒருவரும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக வடமராட்சி கிழக்கு பகுதிக்கு கஞ்சா போதைப்பொருளை கடத்தி வந்த நிலையில், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் பயணித்த படகொன்றினையும் கைப்பற்றியுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் சான்றுப்பொருள்களுடன் சந்தேகநபர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.