ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியா - பண்டாரிகுளம் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவு பொலிஸார் நேற்று இரவு பண்டாரிகுளம் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போதே சந்தேக நபரின் உடமையிலிருந்து ஒரு கிராம் 240 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

குறித்த நபர் பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள பாடசாலைக்கு முன்பாக உள்ள வியாபார நிலையத்தில் வைத்து கடந்த மாதம் கேரளா கஞ்சா பொதியுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத் தண்டனை பெற்றுள்ளாரென பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers