சிங்கள மக்களின் நெகிழ்ச்சியான செயல்!! இளைஞனைக் காப்பாற்றிய மனிதம்

Report Print Sujitha Sri in சமூகம்

களனி விகாரைக்கு அருகில் இன்று பிற்பகல் விபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிளில் பயணித்த முஸ்லிம் இளைஞரொருவர் வீதியோரத்தில் விழுந்து கிடந்துள்ளார்.

இதனை அவதானித்த அப்பகுதி சிங்கள மக்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி வழங்கியுள்ளதுடன், அவசர அம்பியுலன்ஸ் சேவைக்கு தொடர்பை ஏற்டுத்தி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த மக்கள் அந்த இளைஞனுக்கு உதவியுள்ளமையானது, ஜாதி, மத பேதம் தாண்டிய மனிதம் இன்னமும் இலங்கையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.

கடந்த உயர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் நாட்டின் நல்லிணக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த சில விசமிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்படி சம்பவமானது நல்லதொரு பாடத்தை நாட்டு மக்களுக்கு புகட்டியுள்ளதுடன், இன கலவரத்தை தோற்றுவிக்க முயற்சிக்கும் மனித நேயமற்ற விசமிகளுக்கு இலங்கையில் இடமில்லை என்பதை வலியுறுத்தியுள்ளது.