களுகங்கையில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு

Report Print Satha in சமூகம்

களுத்துறை - ஹொரணை, நாரகல பகுதியில் களுகங்கையில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புளத்சிங்கள பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ள நபர், புளத்சிங்கள பகுதியை சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சடலத்திற்கு அருகில் இருந்து பாதணி ஜோடி மற்றும் துவிச்சக்கரவண்டியொன்று என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் கங்கையில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.