மதனமோதகத்தை தம்வசம் வைத்திருந்த இருவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

மதனமோதகத்தை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை நேற்று கைது செய்துள்ளதாக மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் மதனமோதகத்தினை விற்பனை செய்து வருவதாக மதுவரி திணைக்களத்திற்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யபட்டவர்கள் கொட்டகலை பகுதியை சேர்ந்தவர்கள் என மதுவரிதிணைக்கள அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து 150 மில்லிகிராம் மதனமோதகம் மீட்கபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் மதுவரி திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.