இன அழிப்புக்கு நீதி கோரி பாரிஸில் கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Nesan Nesan in சமூகம்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலி சுமந்த 10 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன அழிப்புக்கு நீதி கோரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பிராங்கோ சவினிலுத்தொம் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், பிரான்சு - பாரிசின் புறநகர்ப் பகுதியான சவினிலுத்தொம் நகரத்தின் தொடருந்து நிலைய முன்றலில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழினப்படுகொலையின் சாட்சியங்கள் அடங்கிய புகைப்படங்களும் காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சவினி லுத்தொம் மாநகரசபையின் துணை நகர பிதா மற்றும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பரப்புரைப்பொறுப்பாளர் பிராங்கோ சவினிலுத்தொம், தமிழ்ச்சங்கத்தலைவர், சவினிலுத்தொம் தமிழ்ச்சங்க விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்கள், சவினிலுத்தொம் தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.