சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதிப்பு

Report Print Satha in சமூகம்

மஸ்கெலிய – கவரவில வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறாம் திகதி இவர்கள் அப்பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த வேளை, மஸ்கெலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் நேற்று முன்தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது ஒருவருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.