யாழில் பொலிஸாருக்கு குழப்பத்தை ஏற்படுத்திய நீல நிற கார்

Report Print Dias Dias in சமூகம்

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்னால் நீண்ட நேரமாக தரித்து நின்ற கார் ஒன்றில் இன்று மதியம் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக நீல நிறமுடைய கார் ஒன்று காலையில் இருந்து தரித்து நின்றுள்ளது.

இதனை அவதானித்த பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கார் நின்ற இடத்திற்கு யாரையும் செல்லவிடாது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

பின்னர் பாடசாலை நிறைவடையும் நேரம் என்ற காரணத்தினால் வழமையாக போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டு மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

பாடசாலை நிறைவடைந்து மாணவர்கள் வெளியேறும் தருணத்தில் இருவர் வருகை தந்து தரித்து விடப்பட்ட கார் தங்களுடையது என கூறி காரில் ஏற முற்பட்டுள்ளனர்.

எனினும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அனுமதிக்கவில்லை.

சம்பவ இடத்திற்கு வந்த குறித்த இருவரையும் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது தாம் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் என்றும் தாம் யாழ்ப்பாணத்திற்கு காலையில் வருகை தந்த போது விபத்து ஏற்பட்டதாகவும் அதனால் தாம் காரினை ஓரமாக நிறுத்தி விட்டு யாழ்ப்பாணத்திற்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் பொலிஸார் குறித்த காரினை முழுமையாக சோதனையிட்டதுடன் காரில் வந்தவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.