கொச்சிக்கடை தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவரின் மனைவி குழந்தையை பெற்றெடுத்தார்

Report Print Steephen Steephen in சமூகம்

ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய 22 வயதான அலாதீன் அஹமட் முவாத் என்ற நபரின் மனைவி தனது முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

தாக்குதல் நடந்து இரண்டு வாரங்களில் குண்டுதாரியின் மனைவி குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

கொழும்பு சட்டக் கல்லூரியில் கல்வி கற்ற அஹமட் முவாத், குடும்பத்தில் பிறந்த நான்காவது பிள்ளை என அவரது தந்தையான 59 வயதான அஹமட் லெப்பை அலாதீன், கொழும்பு நீதான் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய் கிழமை சாட்சியமளிக்கும் போது கூறியுள்ளார்.

முவாத் திருமணம் செய்து 14 மாதங்களே கடந்துள்ளது. கடந்த 5 ஆம் திகதி அவரது மனைவி பிள்ளையை பெற்றெடுத்தாகவும் அலாதீன் தெரிவித்துள்ளார்.

எனது மகனை நான் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி இறுதியாக பார்த்தேன். ஏப்ரல் 13 ஆம் திகதி பிறந்த மூத்த சகோதரியின் குழந்தையை பார்க்க சென்றிருந்த போது இறுதியாக சந்தித்தேன்.

தாக்குதல் நடந்த தினம், முவாத்தின் மனைவி, தனது கணவரை தேடியுள்ளார். அவரது மூத்த சகோதரிடம் விசாரித்துள்ளார். முவாத் தனது பெற்றோரின் சென்றிருந்தார் எனவும் மீண்டும் வரவில்லை என்பதால், தேடிப்பார்க்குமாறு மனைவி, மூத்த சகோதரரிடம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அலாவுதீன் அஹமட் முவாத்தின் தந்தை தனது மகனின் தலை பகுதியை அடையாளம் காட்டியிருந்தார். தனது மகன் மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் அனுப்பி வந்ததாகவும் அலாவுதீன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே முவாத்தின் மனைவியின் சகோதரர், முவாத் எழுதியிருந்த குறிப்பு ஒன்று குறித்து தகவல் வெளியிட்டிருந்தார். “ தயவு செய்து மீண்டும் என்னை பற்றி தேட வேண்டாம். நான் மீண்டும் திரும்பி வர மாட்டேன். எனது பெற்றோரை கவனித்துக்கொள்ளுங்கள், எனக்காக தொழுகை நடத்துங்கள்” என அந்த குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

முவாத்தின் மரணத்தின் பின்னரே இந்த குறிப்பு கிடைத்துள்ளது.

அதேவேளை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ள இந்த தற்கொலை குண்டுதாரியின் இரண்டு சகோதரர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. எனினும் அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டில் செயற்பட்டு வரும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் மீதே குற்றம் சுமத்தி வந்தது.