திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கமம் மாதிரிக் கிராமத்தில் இனந்தெரியாதோரால் தாக்குதலுக்குள்ளான நிலையில் நபரொருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் ஆர்.எம்.ராசீக் வயது (53) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் துறைமுக ஊழியர் என்பதோடு அதிகாலை வீட்டில் இருந்த வேளையில் வீட்டுக்குள் புகுந்து தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபருக்கு தலை, கை, காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.