இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய சலுகை - காரணத்தை கூறும் சரத் வீரசேகர

Report Print Steephen Steephen in சமூகம்

பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்பட அமெரிக்காவுக்கு முகாம் ஒன்றை ஏற்படுத்த அரசாங்கம் இடமளித்துள்ளதன் காரணமாக, இலங்கையை அமெரிக்கா தனது விசா விலக்கு நிகழ்ச்சித்திட்டத்தில் சேர்த்துள்ளதாக ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை உட்பட புதிதாக விசா விலக்கு நிகழ்ச்சித்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள நாடுகள் தொடர்பான அறிக்கையை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கையர்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க 180 நாட்கள் விசா விலக்கை வழங்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.