இலங்கையில் வெடித்து சிதறிய ஐ.எஸ் தீவிரவாதி குறித்து சர்ச்சையில் சிக்கியுள்ள பிரித்தானியர்

Report Print Jeslin Jeslin in சமூகம்

அஞ்சம் சௌத்திரி என்ற பிரிட்டனில் உள்ள போதகர் ஒருவரே இலங்கையின் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான அப்துல் லத்தீவ் ஜமில் முஹமட் என்பவரை அடிப்படைவாதியாக்கியுள்ளார் என சர்வதேச ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி கொழும்பு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில்,

ஜமில், ஐ.எஸ் மற்றும் குண்டுதாரிகளுக்கிடையில் தொடர்பு ஏற்படுத்துபவராக இருந்துள்ளார் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கின்றது.

அவர் முற்றிலும் அடிப்படை வாதத்திற்குட்பட்டிருந்தார். தீவிரவாதக் கோட்பாட்டிற்கு ஆதரவளித்தார் என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறு அவர் இதில் ஈடுபட்டார் என்று கேட்டபோது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் போதகர் அஞ்சம் சௌத்திரியின் அடிப்படைவாத போதனைகளில் அவர் கலந்து கொண்டிருந்தார் என அந்த அதிகாரி கூறியதுடன் அந்த போதனைகளின்போது அவர் அவரை சந்தித்திருந்தார் என்றும் கூறியுள்ளார்.

முஸ்லிம்களை ஐ.எஸூடன் சேர்த்துக் கொள்வதற்கு அவர் ஊக்குவித்தமைக்காக 2016இல் பயங்கரவாதச் சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருநத பின்னர் பல வருட சிறைத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதில் 3 வருடங்களை சிறையில் கழித்திருந்தார். அவர் 5 பிள்ளைகளின் தந்தை என்று அதிகாரி கூறியுள்ளார்.

சௌத்திரி தலைமையிலான தீவிரவாதக் குழு அல் முகாஜி சூல் பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்த ஒரு அமைப்பாகும்.

2005. 07. 07 லண்டன் தாக்குதலை தொடர்ந்து அந்த அமைப்பு மீது தடை விதிக்கப்பட்டது. ஆனால் வெவ்வேறு பிரதிமைகளில் அந்த அமைப்பு தொடர்ந்தும் இயங்கி வந்தது. சௌத்திரி பிரிட்டனின் மிகவும் கடும் பயங்கரவாதிகளாக கருதப்பட்ட சிலரை அடிப்படை வாதத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

லண்டன் பிரிட்ஸ் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய குழுவின் தலைவர் குராம்பட், மைக்கல் அடிபலோ ஜோ, மைக்கல் அடிபோவலி போன்றவர்கள் அவர்களின் உள்ளடங்குவர்.

ஜமில் முஹமட் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் குண்டு வெடிப்பை நடத்துவதற்கு முயற்சித்திருந்தார். ஆயினும் அது தோல்வியடைந்ததாகவும் சிறிய ஒரு விருந்தினர் விடுதியில் அவர் தன்னைத் தானே வெடிக்க வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.