திருகோணமலை வளாகம் மீள ஆரம்பிப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் அனைத்து பீடங்களுக்கும் முதலாம் ஆண்டு முதலாம் அரையாண்டு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்குரிய கல்விசார் நடவடிக்கைகள் எதிர்வரும் 22ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக வளாக முதல்வர் வீ. கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 06 மணிக்கு முன்பாக விடுதிகளுக்கு வருகைதருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். மேலும் குறித்த நேரத்திற்கு வருகை தராத மாணவர்கள் விடுதிகளுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலதிக விபரங்களுக்கு கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை பார்வையிடவும் எனவும் வளாக முதல்வர் தெரிவித்துள்ளார்.