தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர் முகத் தேர்வு - 2019

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவை மூன்றாம் வகுப்பின் இரண்டாம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வு இம்மாதம் 21, 22 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

குறித்த நேர்முகத் தேர்வு 09.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை திருகோணமலை, கிழக்கு மாகாண பேரவைச் செயலகத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றிய 811 தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி, தகவல், தொழில்நுட்பக்கல்வி, முன்பள்ளிக்கல்வி, விளையாட்டு பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற கிழக்கு மாகாணம் அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி முத்துபண்டா தெரிவித்துள்ளார்.

நேர்முகப் பரீட்சையின் போது ஆள் அடையாள அட்டை, கல்வி தகமைகள், கற்பித்தல்கான ஆதாரங்கள் ஏனைய தகமைகள் பரீட்சிக்கப்படவுள்ளதாகவும தெரிவித்துள்ளார்.