ரிஷாத் பதியுதீன் மற்றும் ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு!

Report Print Murali Murali in சமூகம்

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை கைது செய்யுமாறு தெரிவித்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராவணா பலய மற்றும் சிங்கள ராவய உள்ளிட்ட அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் தேரர்கள் குழுவொன்று இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளனர்.

அமைச்சர் ரிஷாத் மற்றும் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இந்த அடிப்படைவாத தாக்குதல்களின் பின்னணியில் உள்ளனர் என்பதற்கு ஆதரங்கள் உள்ளன.

இந்த விடயம் குறித்து நாம் அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ள போதிலும் இன்று வரையிலும், இதற்கு எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இவர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் இந்த பிரச்சினைக்கான தீர்வினைக்காண முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.