தற்கொலைதாரிகள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!

Report Print Murali Murali in சமூகம்

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள், தற்கொலை குண்டுதாரிகள் பாதுகாப்பாக இருப்பதற்கு 17 வீடுகளும், 7 பயிற்சி நிலையங்களையும் நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, வணதவில்லுவ, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, கண்டி, அருப்புக்கல, காத்தான்குடி, மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் காணப்படும் முகாம்களில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான பயிற்சி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு, கட்டுவபிட்டிய, பானந்துர, சர்கிகமுல்ல, கொள்ளுப்பிட்டியில் உள்ள செயின்ட் அந்தோனி வீதி, கல்கிஸயில் உள்ள ட்ரோப்பிகோ வீதி, வணதவில்லுவ, வத்தளை எந்தாரமுல்ல, மயூரா பிளேஸ் வெள்ளவத்தை, சாய்ந்தமருது 09, மல்வான, திஹாரிய, கலகெடிஹென, கொச்சிக்கடே, தலுவகொட்டுவ, வாழைச்சேனை-ரிதியதென்ன, குலியப்பிட்டி - சபரித்திபுர, ஹெட்டிபொல, கடுபொத்த, நிந்தாவூர் மற்றும் சம்மாந்துர பகுதிகளில் பாதுகாப்பாக வீடுகள் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.