இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட கடற்தொழில் படகுகள் கையளிப்பட்டுள்ளது

Report Print Mohan Mohan in சமூகம்

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட 50 கடற்தொழில் படகுகள் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

உரிமையாளர் இல்லாத 50 கடற்தொழில் படகுகள் முள்ளிவாய்க்கால் கப்பலடி இராணுவமுகாம் படைபிரிவினரின் கட்டுப்பாட்டில் 10 வருடங்களாக இருந்தது.

குறித்த படகுகளை (மீன்பிடி படகுகள் அற்ற) வருமைக்கோட்டின் கீழ் வாழும் மீனவர்களுக்கு படையினர் இலவசமாக வழங்குவதற்காக, மீனவ சங்கங்களினூடாக படையினரால் விபரங்கள் கோரப்பட்டது.

எனினும் மீனவ சங்கங்களினால் வழங்கப்பட்ட விபரங்களில் வறிய மீனவர்களின் விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை.

இதனால் குறித்த படகுகளை முல்லைத்தீவு கடற்றொலில் கூட்டுறவு சமாசத்திடம் இராணுவத்தினர் இன்று ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.