காணி சண்டையில் ஈடுபட்ட நால்வர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்ணமடு பகுதியில் வயல் காணி சண்டையில் ஈடுபட்ட நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சந்கேதநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தம்பலாகாமம், வர்ணமடு, குஞ்சிரப்பந்திடல், மாக்கைத்திடல் பகுதியை சேர்ந்த 40, 42 மற்றும் 34 வயதுடைய நால்வரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வயல் காணிக்காக தன்னை மூர்க்கத்தனமாக தாக்கி காயப்படுத்தியுள்ளதாக தம்பலகாமம் பொலிஸில் பாதிக்கப்பட்ட நபரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.