கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ள பாதிக்கப்பட்ட மக்கள்

Report Print Theesan in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வன்முறையினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பகுதியில் கொட்டரமுல்லை, புஜ்ஜம்போல, தும்மோதர ஆகிய கிராமங்களுக்கும், குருநாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல, கொட்டாம்பிடிய, மடிகே, அனுகன, கினியம பகுதிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நேற்று விஜயம் செய்திருந்தார்.

இதன்போதே பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்,

வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், குர்ஆன் பிரதிகளும் எரிக்கப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் தாம் நிர்க்கதி நிலையில் அச்சத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

எனவே பாதுகாப்பு விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட தமக்கு இழப்புகளுக்கு நஷ்டஈடு வழங்குமாறும் கோரியுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் தெரிவித்த அனைத்து விடயங்களையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உறுதியளித்துள்ளார்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுடன், அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.