நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் நந்திக்கடலில் இன்று காலை மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன் கரைத்துறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் லோகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இறுதிப் போரின் சாட்சியங்களாக முள்ளிவாய்க்கால் மண்ணும், நந்திக் கடலும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.