சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

பொகவந்தலாவயில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்து வந்த சிகரட்டுகளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸார் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று சோதனையிட்டப்பட்டுள்ளது.

இதன்போது 400 சிகரட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யபட்டுள்ளார்.

இதேவேளை ஒரு சிகரட் 60 ரூபாவிற்கு விற்பனை செய்யபட்டு வந்தமை தெரியவந்துள்ளது.

எனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 21ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொகவந்தலாவ பொலிஸாரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.