தாய் நாடு குருதியில் நனைந்தது போதும் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

Report Print Steephen Steephen in சமூகம்

1071 ஆம் ஆண்டு ஜே.வி.பியின் புரட்சி முதல் குருதியில் நனைந்த தாய் நாட்டை மீண்டும் குருதியில் நனைக்கக் கூடாது என வணக்கிற்குரிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி புனித மரியாள் தேவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற விசேட ஆராதனையில் கலந்துக்கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை நடத்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் இலங்கை இராணுவத்தின் கிறிஸ்தவ ஒன்றியம் இந்த ஆராதனையை ஏற்பாடு செய்திருந்தது. இதில் இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவும் கலந்துக்கொண்டார்.

அங்கு உரையாற்றிய பேராயர்,

“உலகில் உண்மையில் கடவுள் இருந்தால், ஏன் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன. ஏன் அதற்கு இடமளிக்கின்றார் என்று சிலர் நினைக்கலாம். மனிதனின் சுயநலம் காரணமாக இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன. இவை கடவுள் திட்டமிட்டவை அல்ல.

கொலை செய்வதும் மற்றவரின் உயிரை பறிப்பது கடவுளின் சட்டத்தில் இல்லை. தமது உயிர்களை கூட கவனத்தில் கொள்ளாவது இந்த முட்டாள் மனிதர்கள் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து உண்மையில் நாம் கவலையடைகின்றோம்.

1971 ஆம் ஆண்டு முதல் நாம் மனிதர்களை கொலை செய்வதை நன்றாக செய்து வந்தோம். இலங்கை மண் தேவைக்கும் அதிகமாக குருதியில் நனைந்து விட்டது. மேலும் எமது மண்ணை குருதியில் நனைக்கக் கூடாது” என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.


You May Like