ஊவா மாகாணத்தில் ஈரானிய பல்கலைக்கழத்தை தடை செய்யும் யோசனை நிறைவேற்றம்

Report Print Vethu Vethu in சமூகம்

அல் முஸ்தபா பல்கலைக்கழகத்தை தடை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட பிரேரணை ஊவா மாகாணசபையில் ஏகமனதாக நிறைவேறியுள்ளது.

ஊவா மாகாண சபையின் அமைச்சர் செந்தில் தொண்டமானினால் கொண்டு வரப்பட்ட யோசனை ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானின் அல் முஸ்தபா பல்கலைக்கழகத்தின் பேரின் ஊடாக மாகாண பாடசாலைகள் 4 இல் முன்னெடுக்கப்படும் பட்டப்படிப்பை தடை செய்யுமாறு யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்த பிரேரணை ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி நடத்தி செல்லப்படுகின்ற இந்த பட்டப்படிப்பு, ஊவா மாகாண அரச சேவை ஆணைக்குழுவினால் எந்தவொரு தொழிலுக்கான தகுதியாகவும் கருத வேண்டாம் என செந்தில் தொண்டமான தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் வழிப்படும் மத கோட்பாட்டிற்கு மாறாக உள்ள கற்கை நெறிகள் கொண்ட இந்த பட்டப்படிப்பை கற்பிப்பதற்காக பயிற்சி பெறுவதற்கு ஆசியரிகள் சிலர் ஈரான் சென்றுள்ளதாகவும் அதற்கு ஊவா மாகாண ஆளுநரின் அனுமதி பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.