முள்ளிவாய்க்கால் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில் அனுஷ்டிப்பு

Report Print Ashik in சமூகம்

முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிர் நீத்த மக்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் உள்ள பொது அமைப்புக்களின் ஒன்றியத்தில் இன்று காலை ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு இதன் போது அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

முதலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூரும் வகையில் மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் அருட்தந்தை நவரத்தினம் அடிகளார், இந்து மத குரு தர்ம குமார குருக்கள், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.மோகன்ராஜ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.


You May Like

மன்னாரில் முள்ளிவாய்கால் நினைவேந்தலை முன்னிட்டு உப்பில்லா கஞ்சி வழங்கி வைப்பு

ஈழப் போரில் இறுதியில் முள்ளிவாய்கால் மண்ணில் உயிர் நீத்த தமிழ் மக்களின் நினைவேந்தல் தினமான மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அணுசரனையில் முள்ளிவாய்கால் மண்னில் இறுதி யுத்தத்தின் போது உண்ட உப்பில்லா கஞ்சியானது அவ் மக்களை நினைவுபடுத்தும் முகமாக மன்னாரில் வழங்கப்பட்டுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவக்குற்பட்ட பள்ளமடு பகுதியில் பொது மக்கள் அனைவருக்கும் குறித்த கஞ்சியானது வழங்கப்பட்டதுடன் பாதிக்கபட்ட மக்கள் நினைவாக மன்னார் சாந்திபுரம் பாடசாலை மற்றும் ஈச்சலவாக்கை பொது மண்டபம் பகுதியில் மரம் நாட்டியும் வைக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் தனது 4 பிள்ளைகளை இழந்த தாய் ஈச்சளவாக்கை பகுதியில் இறந்த 26 பேரின் நினைவாக ஆலயபகுதியில் மரங்கன்றுகளை நாட்டி வைத்தார்.

இலங்கை முழுவதும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகள் முழுவதும் படசாலைகள் பொது இடங்கள் ஆலயங்கள் என தெரிவு செய்யப்பட இடங்களில் முள்ளிவாய்கால் மண்ணில் இறந்த மக்களின் நினைவாக என சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் நாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.