திருக்கோவிலில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருக்கோவில், வினாயகபுரத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் திருக்கோவில் பிரதேசசபைத்தவிசாளர் டபிள்யு இ.கமலராஜன், காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில், உறுப்பினர்களான த.மோகனதாஸ், எஸ்.ஜெயராணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயர்நீத்த உறவுகளுக்காக தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன், வினாயகபுரம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மார்த்த பூஜைகளும் இடம்பெற்றுள்ளன.