மலையகத்தில் வெசாக் தின கொண்டாட்டங்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நாடளாவிய ரீதியில் வெசாக் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் காணப்படும் பௌத்த வணக்கஸ்த்தலங்களில் விஷேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதேவேளை மலையகத்தின் பல பாகங்களிலும் வெசாக் தின கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, அக்கரப்பத்தனை, நுவரெலியா ஆகிய பகுதிகளிலும் வெசாக் தின கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வின் போது இன மத பேதமின்றி கிராம மக்கள் தோட்டப்புர மக்கள், பொலிஸ் அதிகாரிகள், முஸ்லிம், இந்து மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹட்டன் நீக்ரோதாரம விகாரையிலும் வெசாக் தின விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளதோடு, இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் விகாரையின் விகாரதிபதியிடம் ஆசிப்பெற்றதோடு, பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers