தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Report Print Navoj in சமூகம்

தமிழின அழிப்பின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் தற்போது தமிழர் தாயக்கத்தில் அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

அந்த வகையில் மட்டக்களப்பு - வாகரை மாணிக்க கடற்கரை பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சுரேஸ் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் தமிழ் மக்கள், நலன் காப்பக நிர்வாகிகள் ,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.