வவுனியா நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஆசிகுளத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறுநீரக நோய் தடுப்பு செயல்திட்டத்தின் கீழ் சுமார் பதினைந்து இலட்சம் ரூபா நிதியிலும், வவுனியா பூனாவ கடற்படையினரின் பங்களிப்பிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு வவுனியா, ஆசிகுளம் சனசமூக நிலைய தலைவர் பி.கணேசமூர்த்தி தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உபதவிசாளர் சு.குமாரசாமி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உபதவிசாளர் மகேந்திரன், பிரதேசசபை உறுப்பினர் உத்திரியநாதன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியாவில் இச்செயல் திட்டத்தின் கீழ் ஆறு இடங்களில் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா செலவில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.