யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் கைது

Report Print Sumi in சமூகம்

சந்தேகத்தின் பேரில் முஸ்லிம் இளைஞர் ஒருவரை இராணுவத்தினர் இன்று கைது செய்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவில் கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றில் வைத்தே சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினர் இளைஞரை கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும், வியாபாரம் செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்துள்ளார் என்றும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞரின் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், விசாரணையின் பின்னர், யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.