தேர்தலை ஒத்திவைக்க தற்காலிக அரசாங்கம் நடவடிக்கை

Report Print Steephen Steephen in சமூகம்

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமையை பயன்படுத்தி எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை ஒத்திவைக்க தற்காலிக அரசாங்கத்தை அமைக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்பதால், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

எனினும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க இடமளிப்பதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான நிலைப்பாட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் தற்காலிக அரசாங்கத்தை அமைக்க அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்தலை ஒத்திவைக்க தற்காலிக அரசாங்கத்தை அமைக்கக் கூடாது எனவும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.