யாழில் மலசலகூட குழியில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டு

Report Print Sumi in சமூகம்

யாழில் மலசலகூட குழி தோண்டும் போது, குழியில் இருந்து மோட்டார் குண்டு மற்றும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள வீடொன்றிலேயே இன்று மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மோட்டார் குண்டு மற்றும் கைக்குண்டு கோப்பாய் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதுடன், அவை பழையவைகள் என்றும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.