சென்னையில் தமிழினப்படுகொலையின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Report Print Dias Dias in சமூகம்

சென்னையில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் தமிழினப்படுகொலையின் 10ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மதிமுக தலைமையகமான தாயகத்தில் முன்னதாக தலைமை அலுவலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் சுடரேற்றி மலர் தூவி உறுதி மொழிகளுடன் அஞ்சலி லெலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தந்தை செல்வாவினால் முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் உலகம் எங்கும் இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்லவேண்டும், அது ஒன்று போதும் தமிழீழம் ஏன் வேண்டும் என்பதற்கான பதிலும் , அடையும் வழிமுறையும் உண்டு.

மேலும் வட்டுக்கோடடை தீர்மானத்தைப்போல் இந்த உலகத்தில் எந்த சட்ட வரைபும் இல்லை, ஈழத்தமிழர்கள் எவ்வளவுக்கு அறிவானவர்களும் ஆற்றலானவர்கள் என்பதும் புலப்படும். அந்த தீர்மானத்தின் வழியிலேயே வந்தவர்தான் தலைவர் பிரபாகரன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன், திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராசா, திருமுருகன் காந்தி , மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.