ஜேர்மனியில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி மாபெரும் பேரணி!

Report Print Dias Dias in சமூகம்

முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளை நினைவு கூறும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று பல இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், புலம்பெயர் தேசங்களிலும் உயிர் நீத்த தமது தமிழ் உறவுகளுக்கு அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஜேர்மனியில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன், உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளுக்கு ஜேர்மனியில் நினைவேந்தல் நிகழ்வு

ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் ஜேர்மனியில் இருந்து பங்கெடுத்திருக்கும் அரசவை உறுப்பினர்கள், முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

அமர்வு தொடங்குவதற்கு முன்னராக முள்ளிவாய்காலினை நினைவேந்தி அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபிக்கான சுடரினை மக்கள் பிரதிநிதி பரமானந்தன் ஏற்றினார்.

தொடர்ந்து அரசவை உறுப்பினர்கள், பொதுமக்கள் தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்ததோடு, முள்ளிவாய்க்காலை நினைவு படுத்தும் வகையில் கருத்துரைகளையும் வழங்கியிருந்தனர்.