வெல்லாவெளியில் இடம்பெற்ற ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Report Print Rusath in சமூகம்

ஜனநாயகப் போராளிகள் கட்சி ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள அக்கட்சியின் மட்டு.அம்பாறை மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது அக்கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் என்.நகுலேஸ், மட்டு அம்பாறை மாவட்ட ஊடகப் போச்சாளர் ச.சாந்தன், அலுவலகப் பொறுப்பாளர் க.கோபால் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்கும் ஈகைச் சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவு உரைகளும் இடம்பெற்றன.