காரைதீவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வு

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் 10வது ஆண்டு நிறைவையொட்டி காரைதீவில் விசேட ஆத்மார்த்த அஞ்சலி நிகழ்வும் சுடரேற்றும் வைபவமும் இன்றுமாலை பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் பாலையடி சனசமுக நிலைய கட்டடத்தில் நடைபெற்றது.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்களான த.மோகனதாஸ், சி.ஜெயராணி, இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி உப செயலாளர் அருள்.நிதாஞ்சன், உணர்வாளர் கே.தம்பிராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினர்.