தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

Report Print Sumi in சமூகம்

முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வாலிப முன்னணியின் தலைவர் க. பிருந்தாபன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இலங்கைத்தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை. சேனாதிராஜா பிரதான சுடரை ஏற்றி வைத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம், யாழ். மாநகர சபை முதல்வர் இ. ஆர்னோல்ட், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், கட்சிப்பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

சுடரேற்றல், மலரஞ்சலி, இறை பிரார்த்தனை ஆகிய நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.