கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய சிசிரிவி கருவிகள் தொடர்பில் புதிய தகவல்

Report Print Sujitha Sri in சமூகம்

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய சிசிரிவி கருவிகள் தொடர்பில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடைபெற்ற போது அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் திருப்பலி பூசையை ஒப்புக் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தேவாலய சிசிரிவி கருவிகள் தொடர்பில் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி - குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற இடங்களில் சிசிரிவி புகைப்பட கருவிகளின் மூலம் பதிவு செய்த காட்சிகளை உடனே வெளியிட்டு விட்டார்கள்.

ஏன் இது வரையில் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற சம்பவம் பற்றி எதனையும் வெளியிடவில்லை. அங்குள்ள சிசிரிவி கருவிகள் செயலிழந்ததாகவும் கூறப்படுகின்றமை உண்மையா?

பதில் - குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் அனதை்து சிசிரிவி கருவிகளையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளுக்காக எடுத்து சென்று விட்டனர் என தெரிவித்துள்ளார்.

Latest Offers