பாதுகாப்பு வழங்குவதாக தெரிவித்த படையினர் கெடுபிடி

Report Print Mohan Mohan in சமூகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழாவிற்கு பாதுகாப்பு வழங்குவதாக தெரிவித்த இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனால் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு வருகை தரும் அடியார்கள் துன்பம் மற்றும் வன்முறைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாளை அதிகாலை தொடக்கம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காக இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மாவட்டங்களில் இருந்து வருகைதந்த அடியார்கள் பல இடங்களில் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers