அல் - கைதா இயக்கத்தின் இறுவெட்டு வைத்திருந்த நபர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

அல் - கைதா இயக்கத்தின் யுத்த பயிற்சி பற்றிய இறுவெட்டு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பெயரில் சந்தேகநபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேகநபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அவரிடமிருந்து இரண்டு இறுவெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை அல் கைதா இயக்கத்தின் யுத்த பயிற்சி பற்றிய இறுவெட்டுக்கள் என தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை ஜமாலியா பகுதியை சேர்ந்த இப்ராஹீம் ஷா மஹ்ரூப் (55 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.