இராணுவத்தினரால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றாக துடைத்தெறியப்படுவார்கள்

Report Print Jeslin Jeslin in சமூகம்

இந்த நாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டவர்கள் முப்படையினர். அவர்களின் வீரச் செயல்களை மக்கள் உக்கிரமாக போர் நடைபெற்ற காலப்பகுதியில் கண்டவர்கள் என கல்முனை ஸ்ரீ சுபத்திராம மஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய தன்முதுகல சங்கரட்ண தேரர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எந்நாட்டு வல்லரசையும் எதிர்க்கக்கூடிய வல்லமை இராணுவத்தினருக்கு இருக்கின்றது.

ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலின் பின்னர் எமது படையினர் மேற்கொண்டு வரும் சோதனை நடவடிக்கைகளின்போது கைப்பற்றப்படும் ஆயுதங்களும் பயிற்சி முகாம்களும் இராணுவ மற்றும் பௌத்த மத குருமாரின் சீருடைகளும் பல மில்லியன் பணமும் சந்தேக நபர்களின் கைதுகளும் மக்களிடம் நம்பிக்கை தருபவையாக அமைந்துள்ளன.

அரசியல்வாதிகளை நம்புவதைவிட மக்கள் படையினரில் முழு நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்நாட்டில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றாக துடைத்தெறியப்படுவார்கள்.

அழகான இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப பயங்கரவாதிகளை படையினருக்கு காட்டிக்கொடுக்க வேண்டும். இதற்கு முஸ்லிம் மக்கள் கூடிய ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.