மட்டக்களப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் மூன்று எருமை மாடுகள் பலி

Report Print Rusath in சமூகம்

மட்டக்ககளப்பு, வாகரை - திருகோணமலை பிரதான வீதியின் கதிரவெளி பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் மூன்று எருமை மாடுகள் பலியாகியுள்ளன.

வாகரை பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி வாகனமொன்று பயணித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த எருமை மாடுகள் திடீரென வீதியின் குறுக்காக வந்துள்ளன.

இந்த சந்தர்ப்பத்திலேயே மேற்படி விபத்து நேர்ந்துள்ளதுடன், இதனால் அந்த மூன்று உயிர்களும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளன.

எனினும் வாகனத்தில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்ற போதும் வாகனம் பகுதியளவில் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.