ஈழத்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் குர்திஸ்த்தான் மக்கள்

Report Print Nesan Nesan in சமூகம்

முள்ளிவாய்க்கால் நிகழ்வானது அண்மையில் தமிழர்கள் பரந்து வாழும் அனைத்து பிரதேசங்களிலும் சர்வதேசங்கள் அனைத்திலும் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

அந்த வகையில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரான்ஸ் நாட்டிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது குர்திஸ்த்தான் நாட்டின் பிரஜையும் பிரான்ஸ் நாட்டிற்குரிய கட்டமைப்பின் பேச்சாளரும் அதன் உறுப்பினர்களும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின்போது தங்களது தலைவரின் கொடியுடன் தோன்றி ஈழத்து மக்களுக்கான முழு ஆதரவினையும் தெரிவித்திருந்தமை அங்கு கூடியிருந்த புலம் பெயர் மக்களை மெய்சிலிர்க்க வைத்தது.

இங்கு அவர்கள் கருத்துகைக்கையில்,

எமது நாட்டில் வாழும் மக்களும் பல நாடுகளின் தாக்குதல்களை சந்தித்து பல இழப்புக்களை சந்தித்தவர்கள் அந்த இன அழிப்பில் பல்லாயிரம் மக்களை இழந்திருக்கின்றோம். அதே போன்றுதான் ஈழுத்து தமிழ் மக்களும் தங்களது உரிமைக்காக போராடி பல இழப்புக்களை சந்தித்தவர்கள் அவர்களது போராட்டமும் எங்களது போராட்டமும் ஒன்றுதான்.

அன்று இந்த சர்வதேசம் எங்களையும் பயங்கரவாதிகள் என்றே முத்திரை குத்தியது அதே போன்றுதான் ஈழத்திலே போராடியவர்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது. ஆனால் தற்போது உலகம் புரிந்திருக்கின்றது. அதனால் தங்களது போராட்டத்தினை அங்கீகரிக்கும் நிலைக்கு உலகம் வந்திருக்கின்றது.

அதே நிலைப்பாடு ஈழத்திற்கும் ஒரு நாள் வரும் அதற்காகவேண்டி நாங்களும் ஈழுத்து தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் எனவும் கூறினார்.