கல்முனையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மூவர் இன்று கைது

Report Print Vethu Vethu in சமூகம்

அம்பாறை - கல்முனை பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு தொடர்புடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 21ம் திகதி தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற பின்னர், அதனுடன் தொடர்புடைய பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.