பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அழைப்பு!

Report Print Navoj in சமூகம்

ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளின் 31ஆம் நாள் நினைவை முன்னிட்டு நாளைய தினம் வாழைச்சேனையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதிகள் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சேயோன் தேவாலயம் மற்றும் கொழும்பு பகுதிகளில் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி வாழைச்சேனை அசெம்பிளி ஒப்கோட் தேவாலயத்தில் விசேட திருப்பலி மற்றும் ஆராதனை பூசைகள் இடம்பெறவுள்ளது.

கல்குடா ஊடகவியலாளர்கள் கூட்டுறவு ஒன்றியமும் கோறளைப்பற்று வாழ் மக்களும் இணைந்து மதங்களை கடந்து அஞ்சலி செலுத்தவுள்ளதாக ஏற்பாட்டாளரான வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த அஞ்சலி நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் அழைப்பினை விடுத்துள்ளார்.

அத்தோடு வாழைச்சேனை கைலாயப்பிள்ளையார் ஆலயம், புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்பாள் ஆலயம், பேத்தாழை வீரயடி விநாயகர் ஆலயம் என்பவற்றிலும் விசேட பூசைகள் இடம்பெறவுள்ளது.