தற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

Report Print Navoj in சமூகம்

கடந்த ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றோடு ஒரு மாதம் கடக்கின்ற நிலையில் அன்றைய தினம் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் ச.சஜேந்திரன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனையும், ஈகைச் சுடரேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது வாழைச்சேனை பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தரும், ஊடகவியலாளருமான க.ஜெகதீஸ்வரன், புதுக்குடியிருப்பு கிராம சேவை அதிகாரி சி.வரதராஜன் ஆகியோர் இரங்கல் உரையினை நிகழ்த்தியுள்ளார்கள்.

இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.சந்திரகுமாரன், கிழக்கு பல்கலைக் கழக பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers