வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

Report Print Kamel Kamel in சமூகம்

வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை காலி பொலிஸ் பிரிவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டியில் அமைந்துள்ள தற்கொலைக் குண்டுதாரி ஒருவருக்கு சொந்தமான செப்புத் தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது ஒன்பது பணியாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் பின்னணியிலேயே வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers