தற்கொலை குண்டுதாரிகளாக பயிற்சி பெற்ற பலர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பில் தற்கொலை குண்டுதாரிகளாக பயிற்சி பெற்ற 20 பயங்கரவாத சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்களின் பின்னர் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை வழிநடத்தியதாக கூறப்படும் சஹ்ரான் ஹாசிமின் ஆதரவாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பயிற்சி முகாம்கள் மற்றும் பிரசங்கங்கள் மூலமாக இந்த நபர்களின் மனதை மாற்றி தற்கொலை குண்டுதாரிகளாக உருவாக்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இந்த நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன் அவர்கள் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 69 பேர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Latest Offers