இலங்கையில் உயிருக்கு போராடிய சிறுமி! போராடி காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

50 அடி உயரத்தில் இருந்து குதிக்க தயாராக சிறுமியை இறுதி நொடியில் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.

அனுராதபுரம் நகரத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்திலுள்ள சிறுமி ஒருவர் 50 அடி உயரத்தில் உள்ள நீர் தொட்டியில் இருந்து குதிக்க முயற்சித்துள்ளார்.

எனினும் தீயணைப்பு வீரர்களின் கடும் முயற்சியால் குறித்த சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய அவ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் குழுவொன்று அநுராதபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளது.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் சிலர் குறித்த தொட்டியில் இருந்த நீரை முழுமையாக வெளியே எடுத்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளதுடன், அவரை தங்களின் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான பாரம் தூக்கும் இயந்திரத்தை வரவழைத்து சிறுமியை அதன் மூலம் கீழே கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.