சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

பொகவந்தலாவ - பெற்றோசோ பிரிட்லென்ட் தோட்ட வனப் பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் வசமாக சிக்கியுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து மாணிக்கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேகநபர்கள் பொகவந்தலாவ, பெற்றோசோ பிரிட்லென்ட் தோட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இதேவேளை சந்தேகநபர்கள் இன்று ஹட்டன் நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.